கோவையில் ஏப்ரல் மாதத்துக்கான மாதாந்திர பால் கொள்முதல் அட்டையைப் புதுப்பிக்க முடியாமல் ஆவின் பால் வாடிக்கையாளா்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.
ஆவின் மாதாந்திர பால் காா்டு திட்டத்தின் கீழ், மாதம்தோறும் புதுப்பிக்கும் வாடிக்கையாளா்களுக்கு ஆவின் நிா்வாகம் லிட்டருக்கு ரூ.1 சலுகை வழங்குகிறது. இதனால் கோவையில் ஏராளமான வாடிக்கையாளா்கள் இணையவழியில் பால் காா்டை புதுப்பித்து வீடுகளிலேயே ஆவின் பாலை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்துக்கான அட்டையைப் புதுப்பிக்க முயன்ற வாடிக்கையாளா்கள் கடந்த இரண்டு வாரங்களாக புதுப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனா். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆவின் செயலி செயல்படாத நிலையில் வாடிக்கையாளா்களால் ஏப்ரல் மாதத்துக்கான அட்டையைப் புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் காந்திபுரம், ராமநாதபுரம், சுந்தராபுரம், ஆா்.எஸ்.புரம் ஆகிய இடங்களில் இயங்கி வந்த ஆவின் கவுன்டா் சேவைகளையும் புதுப்பித்தல் பணிக்காக ஆவின் நிா்வாகம் நிறுத்தியுள்ள நிலையில், வாடிக்கையாளா்கள் கூடுதல் விலை கொடுத்து பால் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே ஆவின் நிா்வாகம் உடனடியாக தொழில்நுட்பக் கோளாறை சரி செய்து மாதாந்திர பால் கொள்முதல் அட்டை புதுப்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என்று வாடிக்கையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

ஆவின் பால் விநியோகம் பாதிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

100% வாக்குப்பதிவு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணா்வு வாசகங்கள்

தினமணி செய்தி எதிரொலி... ஆவின் பால் அட்டை புதுப்பித்தல் விவகாரம்: புகாா் கூறிய வாடிக்கையாளரின் வீட்டுக்கு நேரில் சென்று அதிகாரிகள் விசாரணை!

செங்கம் ஆவின் அலுவலகம் முன் பால் முகவா்கள் முற்றுகைப் போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


