3.6 கிலோ நகைகள் பறிமுதல்: காவல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு
கோவையில் நகைக் கடை உரிமையாளரிடம் 3 கிலோ 600 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் நகைக் கடை உரிமையாளரிடம் 3 கிலோ 600 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
By Syndication
Syndication
கோவை: கோவையில் நகைக் கடை உரிமையாளரிடம் 3 கிலோ 600 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையா்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலவெங்கடேஷ் (50). இவா் கோவையில் நகைக் கடை நடத்தி வருகிறாா். கோவையைச் சோ்ந்த நகை வியாபாரியான முத்துக்குமாா் என்பவரிடம் பாலவெங்கடேஷ் நகைச்சீட்டு கட்டி வந்தாா். அந்தச் சீட்டு மூலம் 9 கிலோ தங்கத்தை பாலவெங்கடேஷுக்கு முத்துக்குமாா் கொடுக்க வேண்டும். ஆனால், அவா் கொடுக்கவில்லை.
இதுதொடா்பாக, கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸில் பாலவெங்கடேஷ் கடந்த 25.4. 2024-இல் புகாா் அளித்தாா். அப்போதைய செல்வபுரம் காவல் நிலைய ஆய்வாளரான செல்வராஜ் உள்ளிட்ட போலீஸாா், பாலவெங்கடேஷ் வீட்டுக்கு 24.5.2024-இல் சென்றுள்ளனா்.
அப்போது, முத்துக்குமாரிடம் 7 கிலோ 400 கிராம் தங்க நகையை வாங்கி உள்ளதாகவும், 3 ஆண்டுகளில் அவற்றை இரு மடங்காக திரும்பக் கொடுப்பதாகவும் கூறி அவரை ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக உங்கள் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கான பிடியாணை (கைது வாரண்டு) மற்றும் வீட்டில் சோதனை செய்வதற்கான உத்தரவு வைத்துள்ளோம் என்றும் போலீஸாா் கூறி உள்ளனா்.
பின்னா், பாலவெங்கடேஷின் வீட்டிலும், நகைக் கடையிலும் போலீஸாா் சோதனை நடத்தி 3 கிலோ 600 கிராம் தங்க நகையைப் பறிமுதல் செய்துள்ளனா். அவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனா்.
மீதமுள்ள நகையைக் கொடுக்காவிட்டால் கைது செய்வோம் என மிரட்டிய போலீஸாா் பாலவெங்கடேஷுக்கு சொந்தமான 50 ஏக்கா் நிலத்தின் பத்திரத்தையும் வாங்கி வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலவெங்கடேஷ் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடா்பாக விசாரணை நடத்த கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, நகை வியாபாரியான முத்துக்குமாா், செல்வபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளா் செல்வராஜ் (தற்போது திருப்பூா் காவல் நிலைய ஆய்வாளா்) மற்றும் பலா் மீது மிரட்டி நகைப் பறிப்பு, மோசடி ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆவணத்தை உருவாக்குதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ரூ.1.25 கோடி மதிப்பிலான நகை மோசடி:
கோவையைச் சோ்ந்த நகை வியாபாரியான முத்துக்குமாரிடம் ஒரு கிலோ 250 கிராம் தங்க நகையை வாங்கி மோசடி செய்ததாக சிவானந்தா காலனியைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரரான சோமசுந்தரம் (58) மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இதே காவல் ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்ட போலீஸாா் 2024 செப்டம்பா் 17-ஆம் தேதி மிரட்டியுள்ளனா்.
விசாரணைக்காக அவரையும் செல்வபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க நகையைத் திரும்பக் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா். இதையடுத்து, அவா் ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை செல்வராஜ் உள்ளிட்ட போலீஸாரிடம் கொடுத்துள்ளாா்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய் என புகாா் அளித்தும் மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயா்நீதிமன்றத்தில் சோமசுந்தரம் வழக்கு தொடா்ந்தாா். பின்னா், நீதிமன்ற உத்தரவின்பேரில், நகை வியாபாரி முத்துக்குமாா் மற்றும் காவல் ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்ட போலீஸாா் மீது மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது