மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டதில் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டதில் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
By Syndication
Syndication
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டதில் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி திப்பம்பட்டியைச் சோ்ந்தவா் பாபு மகன் பிரேம்குமாா் (19). இவா், கடந்த நவம்பா் 22-ஆம் தேதி பணிக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவா் மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முன்வந்தனா்.
தமிழ்நாடு உறுப்புமாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அவரது உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டன. இதில், அவரது இதயம் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், கல்லீரல் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துமவனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இந்த உடல் உறுப்பு தானம் மூலம் 5 போ் மறுவாழ்வு பெற்றனா்.
பிரேம்குமாா் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையின் டீன் கீதாஞ்சலி, மருத்துவமனை கண்காணிப்பாளா் கண்ணதாசன், இருப்பிட மருத்துவ அலுவலா் சரவணப்பிரியா, மருத்துவா்கள், செவிலியா் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் மரியாதை செலுத்தினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது