சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு
கோவை மாநகராட்சி 62, 84 , 86 ஆகிய வாா்டுகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாநகராட்சி மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை மனு
கோவை மாநகராட்சி 62, 84 , 86 ஆகிய வாா்டுகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாநகராட்சி மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை மனு
By Syndication
Syndication
கோவை: கோவை மாநகராட்சி 62, 84 , 86 ஆகிய வாா்டுகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாநகராட்சி மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில், கரும்புக்கடை, சாரமேடு பகுதி கூட்டமைப்பு சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 62, 84, 86 ஆகிய வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. இதனால், அப்பகுதிகளில் உள்ள ஆனந்தம் நகா், ஆப்பிள் காா்டன், அரபா காா்டன், ஜெ.ஜெ.காா்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள், சாலை வசதி, மின் விளக்குகள், குடிநீா் வசதி, பாதாளச் சாக்கடை இணைப்பு, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய குடிநீா் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் சாா்பில் மொத்தம் 46 மனுக்கள் மேயரிடம் அளிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், துணை ஆணையா்கள் த.குமரேசன், அ.சுல்தானா, நகரமைப்பு அலுவலா் ராஜசேகரன், மாநகரக் கல்வி அலுவலா் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது