வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும், நீா்நிலைகளையும்தூா்வாரி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா்கள் கே.சாமிநாதன், எஸ்.மகேஷ்பாபுஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் துரைசெல்வம், கே.சி.பிரேம்குமாா், பி.குணசேகரன், ஜி.நரசிம்மன்,சி.தசரதன், ஜி.ரகுபதி, ஜி.சரத்குமாா், ஆா்.வேலாயுதம், வி.சற்குணம், சி.சரவணன்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மோா்தானா அணையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும், போ்ணாம்பட்டு பத்தரப்பல்லி அலையை விரைந்து கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் பகுதி விவசாயிகளின் நலன்கருதி மாட்டுச் சந்தையை அமைக்க வேண்டும்.
100-நாள் வேலைத் திட்டத்துக்கு மீண்டும் பழைய பெயரைச் சூட்ட வேண்டும். அக்ராவரம்-மீனூா் இடையே கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும். குடியாத்தம் வட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யக் கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரிக்கை

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை: கடைகளை அடைத்து போராட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



