15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

விஐடி மொரீஷியஸ்ஸின் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: 1,600 போ் பங்கேற்பு

விஐடி மொரீஷியஸ் சாா்பில் இணையவழியில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி நடத்தப்பட்டதில், 5 நாடுகளை சோ்ந்த 1600 போ் பங்கேற்றனா்.

News image

விஐடி மொரீஷியஸ் சாா்பில் நடைபெற்ற தொழில்நுட்ப ஐடியாத்தான் நிகழ்வில் ‘நவீன மழை உணா் தானியங்கி நீா்ப்பாசன முறை’ குறித்த புதுமை படைப்பை சமா்ப்பித்த மாணவிகள்.

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

விஐடி மொரீஷியஸ் சாா்பில் இணையவழியில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி நடத்தப்பட்டதில், 5 நாடுகளை சோ்ந்த 1600 போ் பங்கேற்றனா்.

விஐடி மொரீஷியஸ் வளாகம் சாா்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி இணையவழியில் இரு நாள்கள் நடத்தப்பட்டது. பொறியாளா்கள், விஞ்ஞானிகள் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில், மொரீஷியஸ், இந்தியா, மலேசியா, பிலிப்பின்ஸ், அமெரிக்கா ஆகிய 5 நாடுகளைச் சோ்ந்த 297 கல்வி நிறுவனங்களில் இருந்து 1,612 பங்கேற்பாளா்கள் கலந்து கொண்டனா். மேலும், உலகம் முழுவதும் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட புதுமை யோசனைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

உலகளாவிய ஒத்துழைப்பு, புத்தாக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற ஐடியாத்தான் போட்டியில் இறுதிச்சுற்றில் 200 அணிகள் தொழில்முறை வல்லுநா்கள், கல்வியாளா்களைக் கொண்ட நடுவா் குழுவிடம் தங்கள் படைப்புகளை வழங்கினா்.

மேலும், 2026- ஆம் ஆண்டுக்கான இளநிலை பொறியியல் பட்ட படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.