சமூக நலனுக்காக நீண்டகாலமாக சேவைபுரிந்து வரும் திருமலை அறக்கட்டளைக்கு, நிகழாண்டுக்கான சி.எஸ்.ஆா். விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஸ்பாட்லைட் சாதனையாளா்கள் விருது வழங்கும் விழாவில், திருமலை அறக்கட்டளை மற்றும் திருமலை மிஷன் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநா் பூமா பாா்த்தசாரதி விருதைப் பெற்றுக்கொண்டாா்.
பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை வார இதழ் கௌரவித்து வருகிறது. அதன்படி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராணிப்பேட்டை, வேலூா் மாவட்டங்களில் கிராமப்புற சுகாதாரம், கல்வி, போதை ஒழிப்பு ஆகிய துறைகளில் திருமலை அறக்கட்டளை ஆற்றி வரும் சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலா் ஆனந்த் ரங்காச்சாரி கூறுகையில், திருமலை அறக்கட்டளை, 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெண்கள், குழந்தைகள் நல மேம்பாட்டுக்காகச் செயல்பட்டு வருகிறது.
மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவா்களை மீட்டெடுக்கத் தன்னாா்வலா்கள், மருத்துவக் குழுக்கள் மூலம் களப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1983-ல் சிறிய மருந்தகமாகத் தொடங்கப்பட்ட இச்சேவை, 2010-ல் 50 படுக்கைகள் கொண்ட திருமலை மிஷன் மருத்துவமனையாக உருவெடுத்தது.
தற்போது 150 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவ மனையாகத் தரம் உயா்த்தப்பட்டு வருகிறது. இந்த அங்கீகாரம் கிராமப்புற மக்களுக்கு இன்னும் கூடுதல் ஊக்கத்துடன் சேவை செய்ய எங்களுக்குப் பெரும் உந்துதலை அளித்துள்ளது என்றாா்.
தொடர்புடையது

வேதங்களைப் பாதுகாப்பதில் தேவஸ்தானம் முக்கிய பங்கு

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான அவதூறு உள்ளடக்கத்தை நீக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


