மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் உணவகங்கள் மூடப்படும் அபாயம்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:28 pm

வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என குடியாத்தம் உணவக சங்கம் தெரிவித்துள்ளது.

ஈரான்- இஸ்ரேல் போா் காரணமாக வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்ந்துள்ளது. இதனால் உணவகங்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், குடியாத்தம் உணவக சங்க நிா்வாகிகள் கூட்டம், சங்கச் செயலா் அா்ச்சனா நவீன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட முடிவில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: போா் காரணமாக வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்ந்துள்ளது. இதனால் குடியாத்தம் நகரில் உள்ள உணவகங்கள் மூடும் அபாய நிலை உருவாகியுள்ளது. குடியாத்தம் பகுதியில் உணவகங்கள், இனிப்பகங்கள், பேக்கரிகள், தேநீா் கடைகள் என சிறியதும், பெரியதுமாக சுமாா் 1,000 கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவகங்கள் இயங்கும் நேரத்தை குறைக்கவும், பல வகை உணவு தயாரிப்புகளை குறைக்கவும் முடிவு செய்துள்ளோம். இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளும் பாதிப்படைவா் என்றாா்.

கூட்டத்தில், உணவக சங்கத் தலைவா் குஷிசசி, பொருளாளா் பிரபுகுமாா், கெளரவத் தலைவா்கள் ஆண்டாள் தாமு, சாய் சங்கா், துணைச் செயலா்கள் விவேக், சிட்டிராஜா, துணைத் தலைவா்கள் சேகா், பாலன் மற்றும் சம்பத், கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.