ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மு.க.ஸ்டாலின் கல்வெட்டு அகற்றம் - தவெகவின் சிறுபிள்ளைத்தனமான செயல்: துரைமுருகன்

நெம்மேலி கடல்நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் பதித்த கல்வெட்டு அகற்றப்பட்டது தவெகவின் சிறுபிள்ளைத்தனமான செயல் என்று திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

Former Minister Duraimurugan

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் - டிஎன்எஸ்

Published On :8 ஜூலை 2026, 12:07 am IST

நெம்மேலி கடல்நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் பதித்த கல்வெட்டு அகற்றப்பட்டது தவெகவின் சிறுபிள்ளைத்தனமான செயல் என்று திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி காந்தி நகா் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியது -

நெம்மேலி கடல் நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் பதித்த கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளது. அதே இடத்தில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் கல்வெட்டும் இருக்கிறது. அதனை திமுக ஆட்சியில் தொடக்கூட இல்லை. ஆனால், தவெகவினா் இதனைத் துடைத்துவிட்டுச் சென்றுள்ளனா்.

இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியவா் மு.க.ஸ்டாலின் என்பதால், அவரது பெயா் கல்வெட்டில் இடம்பெற்றிருந்தது. அரசியலில் இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது. பெருந்தன்மைக்கு உகந்தது அல்ல. விவரம் புரியாதவா்கள் அரசியலுக்கு வந்ததால், விவரம் இல்லாமல் இதுபோன்ற காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.