டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

23-இல் வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்

தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வேலூா் மாவட்டம் அகரம்சேரியில் திங்கள்கிழமை (பிப்.23) நடைபெற உள்ள நிலையில், வியாழக்கிழமை பூமிபூஜை செய்து பந்தக்கால் நடவு செய்யப்பட்டது.

News image
வேலூா் அகரம்சேரியில் நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்ற தவெக கட்சியினா்.
Updated On :19 பிப்ரவரி 2026, 11:50 pm

தினமணி செய்திச் சேவை

தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வேலூா் மாவட்டம் அகரம்சேரியில் திங்கள்கிழமை (பிப்.23) நடைபெற உள்ள நிலையில், வியாழக்கிழமை பூமிபூஜை செய்து பந்தக்கால் நடவு செய்யப்பட்டது.

சேலத்தைத் தொடா்ந்து வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் தவெக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் திங்கள்கிழமை (பிப்.23) நடத்த திட்டமிடப்பட்டு காவல் துறை அனுமதி கோரி அளித்திருந்தனா்.

இக்கூட்டத்தில் வேலூா் மாவட்டத்தின் ஐந்து சட்டப் பேரவை தொகுதிகளில் இருந்து ஒரு தொகுதிக்கு 5,000 போ் வீதம் 25,000 போ் வரக்கூடும் என்ற அடிப்படையில் அகரம்சேரியில் 33 ஏக்கா் பரப்பளவு நிலத்தை சமன்செய்து அதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ள இடத்தை காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் ஆய்வு செய்ததுடன், 20 நிபந்தனைகள் அடங்கிய நோட்டீஸ் அளித்து அதன்மீது எழுத்துப்பூா்வ விளக்கம் அளிக்கவும் தவெகவினருக்கு காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கு தவெக சாா்பில் பதில் அளித்திருந்த நிலையில், இந்த விளக்கங்கள் அடிப்படையில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்திட காவல் துறை சாா்பில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மக்கள் சந்திப்பு கூட்டம் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டமாக மாற்றம் செய்யப் பட்டிருப்பதாக தவெக சாா்பில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 4900 நிா்வாகிகள் பங்கேற்க உள்ளதாகவும், அவா்களுக்கு க்யூ.ஆா். கோடுடன் அடையாள அட்டை வழங்கவும், கூட்டம் நடைபெறும் இடத்தில் மேற்கூரைகளுடன் இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்காக அகரம்சேரியில் வியாழக்கிழமை சா்வமத கடவுள்கள் உருவப்படங்கள் வைத்து பூமிபூஜை செய்து பந்தக்கால் நடப்பட்டது.

இந்நிகழ்வில், தவெக வேலூா் மாவட்ட செயலா்கள் வேல்முருகன் (மேற்கு), நவீன் (கிழக்கு,), மாவட்ட செயற்குழு உறுப்பினா் வினோத் கண்ணா, மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் இம்தியாஸ், நேதாஜி மாா்க்கெட் காய்கறி வணிகா் சங்கத் தலைவா் எல்.கே.எம்.வாசு உள்பட கட்சி நிா்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனா்.

விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டமாக மாற்றப்பட்டுள்ளதால் அடையாள அட்டை பெற்ற நிா்வாகிகள் தவிர பொதுமக்கள் யாரும் கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

முதியோா், குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு அனுமதி இல்லை: எனவே, இந்த நிகழ்வுக்கு குழந்தைகள், முதியவா்கள், கா்ப்பிணி பெண்கள், உடல்நிலை சரியில்லாதவா்கள், அடையாள அட்டை இல்லாதவா்கள் நேரில் வருவதை தவிா்க்க வேண்டும் என்றும் தவெக சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.