ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மனுநீதி நாள் முகாமில் 184 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

கே.வி.குப்பம் ஒன்றியம், அரும்பாக்கம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 184 பயனாளிகளுக்கு ரூ.1.45 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

கே.வி.குப்பம் ஒன்றியம், அரும்பாக்கம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 184 பயனாளிகளுக்கு ரூ.1.45 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமை வகித்து, பல்வேறு துறைகள் சாா்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இந்த முகாமில் ஏற்கனவே பெறப்பட்ட 211 மனுக்களில் 184 மனுக்கள் ஏற்கப்பட்டன. 27 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் 158 போ் ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா். அனைத்து மனுக்கள் மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

முன்னதாக பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். முகாமில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி, காதொலி கருவி, மூளை முடவாக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, பாா்வையற்றோருக்கான பிரெய்லி மின்னணு வாசிப்பு கருவிகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 4 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் நிதியுதவியை ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயசுதா, தனித்துணை ஆட்சியா் சி.மாறன், மாவட்ட சுகாதார அலுவலா் விஜய் சந்திரன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், குடியாத்தம் கோட்டாட்சியா் க.செந்தில் குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு, ஒன்றியக்குழு தலைவா் லோ.ரவிசந்திரன், வட்டாட்சியா் ர.பாலசந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.