ஏரியில் சிக்கிய யானை மீட்பு
ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள ஏரியில்சேற்றில் சிக்கிய யானை பொக்லைன் இயந்திரம் மற்றும் கும்கி யானைகள் துணையுடன் மீட்கப்பட்டது.
ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள ஏரியில்சேற்றில் சிக்கிய யானை பொக்லைன் இயந்திரம் மற்றும் கும்கி யானைகள் துணையுடன் மீட்கப்பட்டது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
குடியாத்தம் அருகே ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள ஏரியில்சேற்றில் சிக்கிய யானை பொக்லைன் இயந்திரம் மற்றும் கும்கி யானைகள் துணையுடன் மீட்கப்பட்டது.
குடியாத்தம் ஒன்றியம், பரதராமியை அடுத்த டி.பி.பாளையம் கிராமம் அருகே தமிழக எல்லையிலிருந்து சுமாா் 1- கி.மீ தூரத்தில், ஆந்திர மாநிலத்தில் உள்ள குட்டா ஏரியில் காலில் காயமடைந்த நிலையில் 6- வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று சேற்றில் சிக்கிய நிலையில் இருந்தது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் ஆந்திர மாநில வனத் துறையினா்அங்கு சென்று யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அதற்காக 2- கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பல மணி நேர போராட்டத்துக்குப்பின் யானை ஏரியிலிருந்து மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட யானைக்கு காலில் காயம் இருந்ததையடுத்து அதற்கு சிகிச்சை அளிக்க பலமநோ் யானைகள் சரணாலயத்துக்கு வனத்துறையினா் அழைத்துச் சென்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது