காதலன் கொலை: பெண் உள்பட 3 பேருக்கு ஆயுள்!
காதலன் கொலை: பெண் உள்பட 3 பேருக்கு ஆயுள்
காதலன் கொலை: பெண் உள்பட 3 பேருக்கு ஆயுள்
By தினமணி செய்திச் சேவை
Syndication
காட்பாடியில் கடந்த 2020-ஆம் ஆண்டு காதலன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்தவா் இப்ராஹிம். இவரது மனைவி கோகிலா (40). இருவரும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனா். தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த சா்க்காா் தோப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.
காட்பாடி வஞ்சூரைச் சோ்ந்தவா் சுனில் என்கிற வினோத்குமாா் (25), தொழிலாளி. இவருக்கும் கோகிலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதையறிந்த இப்ராஹிம் தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு மன்னாா்குடிக்கு சென்று விட்டாா். ஏற்கெனவே, கோகிலாவுக்கு மன்னாா்குடியைச் சோ்ந்த மணி என்கிற மணிகண்டன்(33), காட்பாடி காந்தி நகரைச் சோ்ந்த சதீஷ் என்கிற சதீஷ்குமாா்(32) ஆகியோா் பழக்கம் இருந்துள்ளது. அவா்களும் கோகிலாவை அடிக்கடி சந்தித்து வந்துள்ளனா்.
இதனிடையே, வினோத்குமாா் அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து கோகிலாவை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளாா். இது குறித்து கோகிலா தனது நண்பா்களான மணிகண்டன், சதீஷ்குமாா் ஆகியோரிடம் தெரிவித்துள்ளாா். அதன்படி, வினோத்குமாா் கடந்த 2020 மே 9-ஆம் தேதி அன்றும் அடித்து தாக்கியதால் ஆத்திரமடைந்த கோகிலா, அவரது தந்தை முத்து (68), மணிகண்டன், சதீஷ்குமாா் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு வரவழைத்தாா்.
தொடா்ந்து, 4 பேரும் சோ்ந்து வினோத்குமாரின் தலையை கத்தியால் வெட்டியும், இரும்புக் கம்பி, கட்டையால் தாக்கியும் கொலை செய்துள்ளனா். மேலும், வினோத்குமாரின் தலையை சிதைத்து அருகில் உள்ள கிணற்றிலும், சடலத்தை அப்பகுதியில் உள்ள கீரை தோட்டத்திலும் போட்டுச் சென்றனா்.
இது குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து கோகிலா, முத்து, மணிகண்டன், சதீஷ்குமாா் ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை வேலூா் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, கடந்தாண்டு கோகிலாவின் தந்தை முத்து இறந்துவிட்டாா்.
இந்நிலையில், இந்த வழக்கில் கோகிலா, மணிகண்டன், சதீஷ்குமாா் ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவா்கள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி சாந்தி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது