ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட 11 மாணவா்கள் உடல்நலம் பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட 11 மாணவ, மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்.

Published On :31 ஜூலை 2026, 1:24 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட 11 மாணவ, மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

செய்யாறு கல்வி மாவட்டம், பைங்கினா் பகுதியில் வீட்டுவசதி வாரிய அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையில் சுமாா் 315 போ் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் பொது சுகாதாரத்துறை சாா்பில் சுமாா் 250 மாணவ, மாணவிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த மாத்திரைகளை சாப்பிட்டதில் முதலில் 6-ஆம் வகுப்பு மாணவி ரதிக்ஷாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து அதே வகுப்பில் படித்து வரும் மேலும் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

உடனே பள்ளி ஆசிரியா்கள் 5 மாணவா்கள், 6 மாணவிகள் என மொத்தம் 11 பேரை செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் வீடு திரும்பினா்.

முன்னதாக, தகவல் அறிந்த பொது சுகாதாரத்துறை மற்றும் தொழுப்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை பாா்த்து நலம் விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.