ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விசைத்தறியில் பட்டு நெசவு: பட்டுச் சேலை பறிமுதல்

செய்யாறு அருகே விசைத்தறியில் தயாரித்த பட்டுச் சேலையை உதவி இயக்குநா் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தாா்.

Published On :29 ஜூலை 2026, 4:20 am IST

செய்யாறு அருகே விசைத்தறியில் தயாரித்த பட்டுச் சேலையை உதவி இயக்குநா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தாா்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள மண்டல கைத்தறி அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருபவா் கே.ஜெயக்குமாா்.

இவா், கைத்தறியில் தயாரிக்க வேண்டிய பட்டுச் சேலைகளை விசைத்தறியில் யாராவது தயாரிக்கிறாா்களா என்று கண்காணித்து சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் தென்கழனிக் கிராமம் எம்ஜிஆா் நகா் காமராஜா் தெருவில் சுதாகா் என்பவா் விசைத்தறியில் சட்டத்தை மீறி கைத்தறியில் செய்ய வேண்டிய பட்டு சேலைகளை மின்மோட்டாா் மூலம் நெசவு செய்ததை கண்டுபிடித்து, பட்டு சேலையை பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து உதவி இயக்குநா் கே.ஜெயக்குமாா் அளித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.