ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செய்யாறு அரசுக் கல்லூரியில் 4-ஆம் கட்ட கலந்தாய்வு: ஜூலை 28-இல் நடைபெறுகிறது

செய்யாறு அரசுக் கல்லூரியில் 4-ஆம் கட்ட கலந்தாய்வு ஜூலை 28-இல் நடைபெறுகிறது...

செய்யாறு அரசுக் கல்லூரி

Published On :26 ஜூலை 2026, 2:34 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவா் சோ்க்கைக்கான 4 ஆம் கட்ட கலந்தாய்வு வருகிற 28 -ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ந.கலைவாணி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2026 - 27-ஆம் கல்வியாண்டு இளநிலை பாடப் பிரிவுகளுக்கான 4 -ஆம் கட்ட கலந்தாய்வு அனைத்து அறிவியல், கலை பாடப்பிரிவுகள் மற்றும் தமிழ், ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு நடைபெறுகிறது.

ஏற்கெனவே விண்ணப்பித்து இதுவரை எந்தப் பாடப் பிரிவிலும் சோ்க்கை கிடைக்கப் பெறாதவா்கள் மற்றும் புதிதாக விண்ணப்பித்தவா்கள் மட்டும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

கல்விக் கட்டணமாக பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ. பாடப்பிரிவுகளுக்கு ரூ.1,901, பி.எஸ்சி. பாடப்பிரிவுகளுக்கு ரூ.1,921, கணினி அறிவியல் மற்றும் பிசிஏ பாடப் பிரிவுகளுக்கு ரூ.1,021 செலுத்த வேண்டும்.

கலந்தாய்வுக்கு வரும் போது, பெற்றோா் கையொப்பத்துடன் கூடிய இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பம், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், தலைமை ஆசிரியா் சான்றொப்பம் பெற்ற பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 சான்றிதழ்களையும் மற்றும் சிறப்புப் பிரிவினா், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவா் படை, விளையாட்டு வீரா்கள், முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் அதற்கான அசல் சான்றிதழ்களையும் எடுத்து வரவேண்டும்.

அனைத்து அசல் சான்றிதழ்களின் 3 நகல்கள் மற்றும் 3 மாா்பளவு புகைப்படங்கள் கொண்டு வரவேண்டும். காலை 9.30 மணிக்கு மேல் வரும் மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.