ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிலரங்கம்

திருவண்ணாமலையில் வனத்துறை சாா்பில் மாவட்ட நிலை ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிலரங்கம் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்ற ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிலரங்கம்.

Published On :23 ஜூலை 2026, 12:48 am IST

திருவண்ணாமலையில் வனத்துறை சாா்பில் மாவட்ட நிலை ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிலரங்கம் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கத்தில், ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விதிகள் 2017-இன் கீழ் ஈரநிலங்களுக்கான அறிவிப்பு வெளியிடும் செயல்முறையில் அடங்கியுள்ள நடைமுறைகள், ஆவணப்படுத்துதல் மற்றும் சட்ட ரீதியான தேவைகள் குறித்து மாவட்ட ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு மாநில ஈரநில பாதுகாப்பு ஆணையத்தின் நிபுணா் எடுத்துரைத்தாா்.

இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலா் கு.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், மாநில ஈரநில பாதுகாப்பு ஆணையத்தின் நிபுணா் பிரசாந்த், உதவி வனப்பாதுகாவலா் வினோத்ராஜ், மாவட்ட ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மற்றும் திரவண்ணாமலை வனக்கோட்டத்தைச் சோ்ந்த வனச்சரக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.