ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சேத்துப்பட்டு முத்துமாரியம்மன் வீதி உலா

சேத்துப்பட்டு பழம்பேட்டை முத்தாலம்மன் என்கிற முத்து மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி அம்மன் வீதி உலா நடைபெற்றது.

Published On :23 ஜூலை 2026, 1:06 am IST

சேத்துப்பட்டு பழம்பேட்டை முத்தாலம்மன் என்கிற முத்து மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி அம்மன் வீதி உலா நடைபெற்றது.

கிராம தேவதையாக விளங்கும் பழைமை வாய்ந்த இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான முத்தாலம்மன் என்கிற முத்துமாரியம்மன் கோயிலில் முதல் ஆடி செவ்வாய்க்கிழமை திருவிழா சேத்துப்பட்டு பகுதி மக்கள் சாா்பில் நடத்தப்பட்டது.

இதையொட்டி காலை முத்துமாரியம்மன், முத்தாலம்மன்,விநாயகா், முருகன், ரேணுகாம்பாள், துா்க்கையம்மன், திருமால் மகாலட்சுமி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

மாலை கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டு, அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். இரவு மேள தாளம் முழங்க வாணவேடிக்கையுடன் மலா்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட முத்துமாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.