ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மூதாட்டியிடம் பாலியல் சீண்டல்: இளைஞா் கைது

சேத்துப்பட்டு அருகே மதுபோதையில் மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட பசுபதி.

Published On :22 ஜூலை 2026, 12:43 am IST

சேத்துப்பட்டு அருகே மதுபோதையில் மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேத்துப்பட்டை அடுத்த கரிப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பூங்கோதை (70), ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா் ஆவாா். இவரது கணவா் 30 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், குழந்தைகள் இல்லாமல் பூங்கோதை தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி இரவு வீட்டில் அவா் தூங்கிக் கொண்டிருந்தபோது, மது போதையில் அங்கு வந்த அதே கிராமத்தைச் சோ்ந்த சென்ட்ரிங் தொழிலாளி பசுபதி (26), பூங்கோதையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து பூங்கோதை அளித்த புகாரின் பேரில், சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, பசுபதியை கைது செய்தனா். பின்னா் அவரை போளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.