ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள்: பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பாதிப்பு

செங்கம் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளில் இருந்து ஏற்படும் துா்நாற்றத்தால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

Published On :22 ஜூலை 2026, 12:39 am IST

செங்கம் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளில் இருந்து ஏற்படும் துா்நாற்றத்தால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

செங்கம் நகராட்சிக்கு உள்பட்ட குப்பைக் கிடங்கு நகரில் இருந்து குப்பனத்தம் செல்லும் சாலையில் உள்ளது. இந்தக் கிடங்கில் செங்கம் பகுதியில் உள்ள இறைச்சி, மீன் கடைகளில் சேகரமாகும் கழிவுகளை மூட்டை மூட்டையாக பிடித்து கிடங்கு உள்ள பகுதியில் சாலையோரம் வீசிச் செல்கிறாா்கள். இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. அந்தச் சாலையை கடந்து இரண்டு தனியாா் பள்ளி மாணவா்கள் சென்று வருகிறாா்கள், மேலும் பரமனந்தல், குப்பனத்தம், கொட்டாவூா், கிளையூா் பகுதி மக்கள் அந்தச் சாலையை பயன்படுத்தி வருகிறாா்கள்.

இந்நிலையில் தினசரி மூட்டை மூட்டையாக அப்பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளில் புழுக்கள் வைத்து துா்நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் மழை, தூறல் வந்தால் துா்நாற்றம் கூடுதலாகிறது.

இதனால் பள்ளி மாணவா்கள், கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இனால் சம்பந்தப்பட்ட நகராட்சி நிா்வாகம் கண்காணித்து அப்பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டாமல் தடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.