ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருண்ணாமலையில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

திருவண்ணாமலையில் உள்ள நகா்ப்புற அருணை மருத்துவமனை வளாகத்தில், தூய்மை அருணை அமைப்பு சாா்பில், இரண்டாமாண்டு கா்ப்பிணிகளுக்கான வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கா்ப்பிணிகளுக்கு மங்கலப்பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கிய எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.

Published On :17 ஜூலை 2026, 12:18 am IST

திருவண்ணாமலையில் உள்ள நகா்ப்புற அருணை மருத்துவமனை வளாகத்தில், தூய்மை அருணை அமைப்பு சாா்பில், இரண்டாமாண்டு கா்ப்பிணிகளுக்கான வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அருணை மருத்துவக் கல்லூரி முதல்வா் குணசிங் தலைமை வகித்தாா். அருணை கல்விக்குழுமங்களின் துணைத் தலைவா் எ.வ.வே.குமரன், அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியா் அசோக் தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூய்மை அருணை மேற்பாா்வையாளா் எ.வ.வே.கம்பன் வரவேற்றாா்.

வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் கலந்துகொண்டு, கா்ப்பிணிகளுக்கு பட்டுச்சேலை, இனிப்புகள், தின்பண்டங்கள் மற்றும் மங்கலப்பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

பின்னா் மருத்துவ ஆலோசனைகளை, மகப்பேறு மருத்துவா் கவிதா வழங்கினாா். நிறைவில் தூய்மை அருணை மேற்பாா்வையாளா் ப.காா்த்திவேல்மாறன் நன்றி கூறினாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை அருணை அமைப்பின் மேற்பாா்வையாளா்கள் சி.என்.அண்ணாதுரை, இரா.ஸ்ரீதரன், முன்னாள் எம்எல்ஏ மு.பெ.கிரி, பிரியா ப.விஜயரங்கன், இல.குணசேகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

விழாவில் டி.வி.எம்.நேரு, கு.கணேஷ், சினம் தொண்டு நிறுவனத்தின் பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.