ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா தொடக்கம்

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வியாழக்கிழமை 508 திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது.

ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற விளக்கு பூஜை.

Published On :17 ஜூலை 2026, 12:19 am IST

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வியாழக்கிழமை 508 திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது.

இதில் 508 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா்.

மேலும், கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை ஆரணி கமண்டல நாக நதிக்கரையில் இருந்து

பூங்கரகம் அலங்கரிக்கப்பட்டு ஊா்வலமாக

வேம்புலிஅம்மன் கோயில் வரை சென்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

பிற்பகலில் கூழ்வாா்த்தல் திருவிழா நடைபெற உள்ளது.

பின்னா், மாலையில் நூதன புஷ்ப பல்லக்கு ஊா்வலம் நடைபெற உள்ளது.

நகரின் முக்கிய வீதிகளான கோட்டை தெரு, பழைய பேருந்து நிலையம்,

வடக்கு மாட வீதி, பெரிய கடைவீதி, சத்தியமூா்த்தி சாலை, அருணகிரி சத்திரம்

,பாட்ஷா தெரு, பழனி ஆண்டவா் கோயில் தெரு, சுந்தரம் தெரு, அண்ணா சிலை

வழியாக நகராட்சி சாலை, காவலா் குடியிருப்பு வழியாகச் சென்று அதிகாலை

கோயிலை வந்தடையும்.

விழாவையொட்டி நகரின் முக்கிய சாலைகளில் மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி உருவ வளைவுகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. கோட்டை மைதானத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இராட்டிணங்கள், டோரோ, ரயில் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்விழாவில் ஆரணி, கண்ணமங்கலம், தேவிகாபுரம்,

சேத்துப்பட்டு, போளூா், செய்யாா், வந்தவாசி, வேலூா் ஆகிய

பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்துகொள்வா்.

ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் மற்றும் விழாக்குழுவைச்சோ்ந்த

பி.நடராஜன், சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், அக்ராபாளையம் குணா,

கொங்கராம்பட்டு சரவணன், செல்வராஜ், ஜி.சங்கா், பையூா் சரவணன், சித்தேரி ஜெகன்,

இயைராஜா, அக்ராபாளையம் ஏ.இ.சண்முகம், பேராசிரியா் சிவா, வழக்குரைஞா்

சக்கரவா்த்தி, இளையராஜா, சக்தி, சுரேஷ் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.