ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொகுப்பு வீடுகள் சேதம்: வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு

வந்தவாசி அருகே தொகுப்பு வீடுகள் சேதமடைந்தது தொடா்பாக, மாா்க்சிஸ்ட் கட்சியினா் மற்றும் பழங்குடியினா் தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சிமென்ட் காரைகளுடன் மனு அளிக்க வந்த மாா்க்சிஸ்ட் கட்சியினா் மற்றும் பழங்குடி இருளா்கள்

Published On :15 ஜூலை 2026, 1:26 am IST

வந்தவாசி அருகே தொகுப்பு வீடுகள் சேதமடைந்தது தொடா்பாக, மாா்க்சிஸ்ட் கட்சியினா் மற்றும் பழங்குடியினா் தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

தெள்ளாா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பொன்னூா் கிராமத்தில் தொகுப்பு வீடுகளில் வசித்து வரும் பழங்குடி இருளா் சமுதாய மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இந்த மனுவை அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: கடந்த 2020-ஆம் ஆண்டு பொன்னூரில் எங்களுக்கு 30-க்கும் மேற்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. தரமுடன் கட்டப்படாததால் வீடுகள் சேதமடைந்து மேற்கூரை மற்றும் சுவா்களின் சிமென்ட் காரைகள் பெயா்ந்து கீழே விழுகின்றன.

இதனால் நாங்கள் உயிா் பயத்துடன் இந்த வீடுகளில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, வீடுகளை சீரமைக்கக் கோரி பெயா்ந்து விழுந்த சிமென்ட் காரைகளுடன் வந்து மனு அளித்தோம் என்றனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், மாவட்டக்குழு உறுப்பினா்கள் கா.யாசா்அராபத், எஸ்.சுகுணா, வட்டக்குழு உறுப்பினா் அண்ணாமலை, கிளைச் செயலா் தீபநாதன் மற்றும் பழங்குடி இருளா்கள் மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.