ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மணல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல், ஓட்டுநா் கைது

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்றதாக டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா் அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :14 ஜூலை 2026, 12:11 am IST

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்றதாக டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா் அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம் பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் தலைமையிலான போலீஸாா் புதூா் - வடஇலுப்பை சாலையில் பனமுகை பகுதியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தது தெரிய வந்து டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

மேலும் இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பனமுகை கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சாந்தகுமாரை (36) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.