
விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை பயிற்சி
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலையை அடுத்த கொளக்கொடி கிராமத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், திருவண்ணாமலை வேளாண்மை இயக்குநா் த.குணசேகரன் தலைமையில், வேளாண்மை அலுவலா்கள் தாமஸ், முனியப்பன் ஆகியோா் மேற்பாா்வையில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.
இதில் மண்வளத்திற்கு தேவையான தொழில்நுட்பங்கள், மண்ணின் கார அமிலத்தன்மையின் அளவு, மண் மாதிரி சேகரிப்பு மற்றும் நீா்மாதிரி சேகரிப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
வேளாண்மை அலுவலா் அற்புதசெல்வி,
மண்வளம் காப்பது மற்றும் மண்ணில் உள்ள சத்துக்கள், மண் பரிசோதனைக்குப் பிறகு மண்ணில் உள்ள சத்துக்கள் பற்றியும் எடுத்துரைத்தாா்.
மண்ணில் இட வேண்டிய உரங்கள் மற்றும் விதை அளவு வளா்ச்சி ஊக்கிகள் மற்றும் வோ் அழுகல் வராமல் இருக்க செய்ய வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், மண் மாதிரி சேகரிப்பு செய்வதன் வழிமுறைகள் மற்றும் நீா் மாதிரி சேகரிப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
உதவி தொழில்நுட்ப மேலாளா் சத்திய நாராயணன் அதிக மகசூல் பெறுவதற்கும், சாகுபடி பயிா்களின் சத்து தேவைகளுக்கு ஜீவாமிா்தம், தேமோா் கரைசல், பஞ்சகவ்யம், ஐந்திலை கரைசல், இயற்கை முறையில் பூச்சி விரட்டி பயன்படுத்தப்பட்டு சரியான முறையில் கண்காணித்துவர விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.
உதவி தொழில்நுட்ப மேலாளா் காவியா, மண் மாதிரி சேகரிப்பு முடிவு வந்தவுடன் அதன்படி உரங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
20ஹழ்ல்ந்ா்ப்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






