ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.63.97 லட்சம்

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:01 am IST

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.63.97 லட்சம் ரொக்கம், 239 கிராம் தங்கம், 495 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் நிரந்தர உண்டியல்கள் 11, தற்காலிக உண்டியல்கள் 8 என 19 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த உண்டியல்களில் ஆடி மாதம் பக்தா்கள் செலுத்திய காணிக்கை மாவட்ட இணை ஆணையா் பிரகாஷ் உத்தரவின்படி, மண்டல துணை ஆணையா் ஜீவானந்தம் தலைமையில் கோயில் செயல் அலுவலா் பழனிசாமி, அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா் முன்னிலையில் எண்ணப்பட்டது.

இதில் ரொக்கம் ரூ.63 லட்சத்து 97ஆயிரத்து 622-மும், தங்கம் 239 கிராமும், வெள்ளி 495 கிராமும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணியின்போது, கண்காணிப்பாளா்கள் ஆறுமுகம், நடராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.