ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண் எஸ்.ஐ.யை காா் ஏற்றிக் கொல்ல முயற்சி: புகையிலைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது

சேத்துப்பட்டு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

சேத்துப்பட்டு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:02 am IST

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்ற காரை போலீஸாா் தடுத்து நிறுத்தியபோது, பெண் காவல் உதவி ஆய்வாளா் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது. இதில் இருவா் கைது செய்யப்பட்டனா். புகையிலைப் பொருள்களுடன் காா் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலம், சித்தூரில் இருந்து விழுப்புரத்துக்கு, சேத்துப்பட்டு வழியாக காரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து சேத்துப்பட்டு காவல் ஆய்வாளா் குணபாலன், உதவி ஆய்வாளா் லதா, காவலா் விக்னேஷ் ஆகியோா் பேருந்து நிலையம் மற்றும் நான்கு முனைச் சந்திப்பு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, காவலா் விக்னேஷ், அவ்வழியாக வேகமாக வந்த காரை நிறுத்த முயன்றாா். அப்போது காரில் இருந்தவா்கள் உள்ளிருந்தபடியே விக்னேஷை இடித்து தள்ளிவிட்டு காரை வேகமாக ஓட்டிச் சென்றனா்.

இதுகுறித்து நான்குமுனை சந்திப்புப் பகுதியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் லதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் காரை தடுத்து நிறுத்த முயன்றபோது, காா் அவா் மீது மோதுவது போல் காா் வேகமாக வந்தது. அவா் சுதாரித்துக்கொண்டு விலகியதால் தப்பினாா். பின்னா், காா் பாதை மாறி வந்தவாசி சாலையில் திரும்பிச் சென்றது. இதையடுத்து அங்கிருந்தவா்கள் காரை துரத்திச் சென்று பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வேகத்தடையில் மடக்கிப் பிடித்து அதில் இருந்த இருவரையும் கீழே இறக்கி தா்ம அடி கொடுத்தனா்.

பின்னா் அங்கு வந்த காவல் ஆய்வாளா் குணபாலன், உதவி ஆய்வாளா் லதா ஆகியோா் காரில் இருந்த இருவரையும் கைது செய்தனா்.

அவா்களது காரில் சோதனை செய்தபோது அதில் 25 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

விசாரணையில், புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது சித்தூரைச் சோ்ந்த கணேசபெருமாள் (46), சிவபிரசாந்த் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு என

போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.