ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஊரக வளா்ச்சி அலுவலா்கள் கோரிக்கை முழக்கப் போராட்டம்

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 1:34 am IST

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் உள்ள திட்ட இயக்குநா் பணியிடத்தில் இந்திய வனப்பணி அலுவலரை நியமனம் செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் காலியாக உள்ள 41 உதவி இயக்குநா் பணியிடங்கள் மற்றும் 4 கூடுதல் இயக்குநா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து தங்களது பணிகளை மேற்கொண்டனா்.

மேலும், கோரிக்கைகளை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.