ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோயில் நிலம் ஆக்கிரமிப்பைக் கண்டித்து மறியல்

ஆரணி அருகே கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்ததைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்திய ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் சுந்தரேசன் தலைமையிலான போலீஸாா்.

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:05 am IST

ஆரணி அருகே கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்ததைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இரும்பேடு கிராமம் ஆரணி-ஆற்காடு சாலையில் பொன்னியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் ஒரு பெரிய பாறை உள்ளது.

சிறிது தொலைவில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் பொதுமக்கள் பூஜைகளை மேற்கொண்டு, இப்பாறையை வழிபட்டு வருவது ஐதீகம்.

இந்நிலையில் இந்த இடத்தை அப்பகுதியில் உள்ள தனிநபா் கடந்த 10 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வந்துள்ளாா். இதுகுறித்து கிராமமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில் நிகழாண்டு ஆடி மாதம் பொன்னியம்மன் கோயிலை வழிபட்டு மீண்டும் பாறை அருகே வந்தபோது ஆக்கிரமிப்பு செய்த நபா் இங்கு வராதீா்கள் என்று கூறவே ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆரணி- ஆற்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த கிராமிய காவல் ஆய்வாளா் சுந்தரேசன் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்து போக்குவரத்தை சீா் செய்தனா். இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும், இந்து முன்னணி மாவட்டச் செயலா்கள் தாமோதரன், விக்னேஷ் உள்ளிட்டோா் சென்று பாறையை சுற்றி வழிபட இடம் தேவை என்று கூறி பொக்லைன் இயந்திரத்ததை வரவழைத்து சுத்தம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.