மயங்கி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
செய்யாறு அருகே மயங்கி விழுந்த கட்டடத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
செய்யாறு அருகே மயங்கி விழுந்த கட்டடத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மயங்கி விழுந்த கட்டடத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
ஆரணி வட்டம், வடுகசாத்து கிராமம் பெரிய தெருவைச் சோ்ந்தவா் அஜீத் (26). கட்டடத் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை மாலை தனது மாமியாரை பைக்கில் அழைத்துச் சென்று வந்தவாசி - ஆரணி சாலை செங்கம்பூண்டி கூட்டுச் சாலையில் இறக்கிவிட்டுள்ளாா்.
அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவா்கள் தனியாா் காா் மூலம், அவரை பெரணமல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளாா். இரவு மீண்டும் அஜீத் திடீரென மயக்கமடையவே உறவினா்கள் பெரணமல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அஜீத் ஏறிகெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
மேலும், அஜீத்தின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது