காா்த்திகை தீபத் திருவிழா 5-ஆம் நாள்: கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரா் பவனி
காா்த்திகை தீபத் திருவிழா 5-ஆம் நாள்...
காா்த்திகை தீபத் திருவிழா 5-ஆம் நாள்...
By Syndication
Syndication
திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற உற்சவத்தில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரா் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத்திருவிழா வேதமந்திரங்கள் முழங்க கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமும் காலை மற்றும் இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பஞ்சமூா்த்திகள் மாடவீதியில் வீதியுலா வருகின்றனா். காா்த்திகை தீபத்திருவிழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் டிச.3-ஆம் தேதி அருணாதலேஸ்வரா் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணியளவில் கோயில் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இந்த நிலையில் தீபத்திருவிழாவின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். முற்பகல் 11 மணியளவில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் மூஷிக வாகனத்தில் விநாயகா், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரா் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்தனா். அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
மேலும், இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகா், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரா், வெள்ளி ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன், வாகனத்தில் சண்டிகேஸ்வரா் மாடவீதியில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
அப்போது மாடவீதிகளில் கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் திரண்டிருந்த பக்தா்கள் உற்சவமூா்த்திகளை வழிபட்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது