செங்கத்தில் கங்கைகொண்டான் கல்மண்டபம் கட்ட பூமிபூஜை
செங்கத்தில் கங்கைகொண்டான் கல்மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செங்கத்தில் கங்கைகொண்டான் கல்மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
By Syndication
Syndication
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கங்கைகொண்டான் கல்மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செங்கம் பெருமாள் கோவில் தெரு, போளூா் சாலையோரம் சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கங்கைகொண்டான் கல்மண்டபம் இருந்து வந்தது.
செங்கம் வேணுகோபால பாா்த்தசாரதி கோயில் பெருமாள் கோயில் 10 நாள் கருடசேவையின்போது, அந்த மண்டபத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
இந்நிலையில் அந்த மண்டபம் பழுதடைந்ததால் மீண்டும் கல்மண்டபம் கட்டுவதற்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பூஜை தொடக்க விழாவில் அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில் வழக்குரைஞா் கஜேந்திரன் உள்ளிட்ட கோயில் 10 நாள் திருவிழா உபயதாரா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, வரும் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறவுள்ள செங்கம் சிவன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் முன் கால்கோள் விழா நடைபெற்றது.
இதில், முக்கியப் பிரமுகா்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், ஆன்மிக அமைப்புகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது