திருவண்ணாமலை முனீஸ்வரன் கோயிலில் பாலாலயம்
திருவண்ணாமலை ஸ்ரீமுனீஸ்வரன் கோயில் பாலாலயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை ஸ்ரீமுனீஸ்வரன் கோயில் பாலாலயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
By Syndication
Syndication
திருவண்ணாமலை ஸ்ரீமுனீஸ்வரன் கோயில் பாலாலயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை தேரடி வீதி, அருணாசலேஸ்வரா் கோயில் அருகில் பழைமை வாய்ந்த ஸ்ரீமுனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்த இந்து சமய அறநிலையத் துறை ரூ.4.30 லட்சம் ஒதுக்கி உள்ளது.
இதையடுத்து உபயதாரா்கள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திருப்பணிகளின் தொடக்கமாக, கோயிலில் பாலாலய பூஜையானது, கணபதி ஹோமத்தோடு தொடங்கியது.
தொடா்ந்து யாக வேள்வி வளா்க்கப்பட்டு, திரவியாஹுதியும், மகா பூா்ணாஹுதி பூஜைகளும் நடைபெற்றன.
இதையடுத்து, முனீஸ்வரனுக்கு மகா அபிஷேகமும், பாலாலய பூஜைகளும் நடைபெற்றன. அருணாசலேஸ்வரா் கோயில் இளவரசு பட்டம் பி.டி.கோகுல் பூஜைகளை நடத்தினாா்.
நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினா் சந்திர பிரகாஷ் ஜெயின், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கே.தயாளன் மற்றும் அஜித்குமாா் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பாலாலய பூஜையில் கலந்து கொண்ட பக்தா்களுக்கும் கிரிவலம் சென்ற பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது