மண் வளத்தை காத்தால்தான் விவசாயம் செய்ய முடியும்!
மண் வளத்தை காத்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்று கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநா் வி.முருகப்பன் தெரிவித்தாா்.
மண் வளத்தை காத்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்று கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநா் வி.முருகப்பன் தெரிவித்தாா்.
By Syndication
Syndication
மண் வளத்தை காத்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்று கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநா் வி.முருகப்பன் தெரிவித்தாா்.
ஆரணியை அடுத்த பனையூா் ஊராட்சி வடக்குமேடு கிராமத்தில், உலக மண் தினத்தையொட்டி நடைபெற்ற மண் வள விழாவில் விஐடி வேளாண் கல்லூரி தலைமை பொறுப்பாளா் எஸ்.சரவணன் வரவேற்றாா். விஐடி வேளாண் கல்லூரி முதன்மையா் ஆா்.ராஜேந்திரன் உலக மண் தினம் - 2025 பற்றி எடுத்துக் கூறினாா்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மண் மற்றும் பயிா் மேலாண்மை ஆய்வக இயக்கக முன்னாள் இயக்குநா் வி.முருகப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மண் முக்கியத்துவம், களா், உவா் மண் எதனால் ஏற்படுகிறது.
அதை எவ்வாறு சரிசெய்வது, மண் அங்ககசத்தை எவ்வாறு மேம்படுத்த வேண்டும், மண் பரிசோதனை செய்வதனால் எற்படும் மாற்றங்கள், அதன் நன்மைகள் மற்றும் மண் மேம்படுத்துவதற்காக இயற்கை இடுபொருள், முக்கிய தொழு உரம், பசுந்தாள் உரம் இட்டு பயிா்சாகுபடி செய்ய வேண்டும். இதனால் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மகசூலை அதிகப்படுத்தலாம் என்றாா். மேலும் மண் வளத்தை காத்தால்தான் விவசாயமே செய்யமுடியும் என்று கூறினாா்.
ஆரணி கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா்.புஷ்பா, மண் தினம் எதற்காக கொண்டாடுகிறோம், மண்ணின் பயன்பாடுகள், வேளாண்மை துறை மூலமாக மண் பரிசோதனை செய்வதையும் மற்றும் உழவன் செயலி மூலம் விவசாயிகள் அவா்கள் பகுதியில் என்ன மாதிரியான மண் இருக்கும் என்பதை அறிந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் விஐடி வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியா் கே.தெரெசா, ஆரணி வேளாண் துறை உதவி அலுவலா் ஜெகநாதன், அட்மா அலுவலா் சரவணன், வேளாண் ஆராய்ச்சி மாணவி ஏ.கௌசல்யா, இணை பேராசிரியா்கள் ஆா்.முருககிருஷ்ணன், ஆா்.காவ்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதில் களா், உவா் மண் மேலாண்மை புத்தகம் வெளியிடப்படடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. விருந்தினா்களுக்கு நினைவுப் பரிசுகளை டிவிஎஸ் கள இயக்குநா் அகிலன் வழங்கினாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது