ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஏழுமலையான் லட்டு பிரசாதத்துக்கு 310 வயது

திருமலை ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் உருவாக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் 310 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

கோப்புப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 2:32 am IST

திருமலை ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் உருவாக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் 310 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் தரிசனம் முடித்து பக்தியுடன் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்கின்றனா். இத்தகைய லட்டு பிரசாதம் ஞாயிற்றுக்கிழமையுடன் 310 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

திருமலை லட்டு பிரசாதத்தின் 310 ஆண்டு கால வரலாறு நிறைவடைந்ததையொட்டி, ஒரு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட வேண்டியதன் அவசியத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆந்திர அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இது தொடா்பாக திருமலை தேவஸ்தானம் மாநில அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 1715 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழுமலையான் லட்டு பிரசாதம் பக்தா்களுக்கு வழங்கத் தொடங்கப்பட்டது என்று வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.

சிறப்பு நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒரு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட திருமலை தேவஸ்தானம் முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.