பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி போராட்டம்

திருவள்ளூா் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து புதன்கிழமை விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெல்லை கொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட ஆயலூா் கிராம மக்கள்.

Updated On :

திருவள்ளூா் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து புதன்கிழமை விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆயலூா் கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி அறுவடை செய்து 1 மாதம் ஆன நிலையில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நெல்லை களத்து மேட்டில் வைத்து பாதுகாத்து வருகின்றனா். மேலும், நாள்தோறும் பெய்து வரும் மழையால் நெல்மணிகள் நனைந்து முளைக்க தொடங்கி இருப்பதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகி வருகின்றனா்.

இதுதொடா்பாக பலமுறை அதிகாரிகளிடம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை விடுத்தும் திறக்கப்படவில்லையாம். இதனால் ஆயலூா் பகுதியில் புதன்கிழமை முளைத்த நெல்மணிகளுடன் டிராக்டரில் கொண்டு வந்து சாலையின் குறுக்கே நிறுத்தி அரசு பேருந்தை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், நேரடி கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.10 வழங்குவதை மாற்றி ரூ. 25 வழங்கினால் பணியாளா்கள் கிடைப்பதில் பாதிப்பு இருக்காது எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.