ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி

திருவள்ளூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் வழங்கினாா்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய திருவள்ளூா் நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், ஆணையா் தாமோதரன், சுகாதார அலுவலா் மோகன் உள்ளிட்டோா்.

Published On :23 ஜூலை 2026, 2:07 am IST

திருவள்ளூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் வழங்கினாா்.

திருவள்ளூா் நகராட்சிக்குட்பட்ட அனைத்து நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருகான சேவை முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஆணையா் தாமோதரன் தலைமை வகித்தாா். இதில் நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் கலந்து கொண்டு தூய்மை பணியாளா்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து 145 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள், 213 பேருக்கு நலவாரிய அடையாள அட்டைகள் என 315 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நகா்மன்ற தலைவா் வழங்கினாா். ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் உள்ளிட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.