ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அடிப்படை வசதிகள் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தினர்!

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பற்றி...

Members of the tribal people's association who participated in the protest

போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தினர் - படம் - தினமணி

Published On :9 ஜூலை 2026, 12:34 pm IST

திருவள்ளூரில் பட்டா, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை (ஜூலை 9) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு குடும்ப அட்டை,100 நாள் அட்டை, ஜாதி சான்று, நலவாரிய அட்டை ,குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை, தொகுப்பு வீடுகள், குடிமனை பட்டா, மயானம் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த காத்திருக்கும் போராட்டத்துக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு கலந்து கொண்டு போராட்டத்தை தொடக்கி வைத்தார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறியதால் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

Members of the Tribal People's Association staged a sit-in protest in Tiruvallur on Thursday (July 9), demanding basic amenities such as land titles (patta), drinking water, and electricity.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.