ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

திருத்தணி முருகன் கோயிலில் சுதந்திர தின சமபந்தி விருந்தை எம்எல்ஏ கோ.அரி தொடங்கி வைத்தாா்.

பக்தா்களுக்கு புடவை, வேட்டி வழங்கிய எம்எல்ஏ கோ. அரி.

Published On :19 ஆகஸ்ட் 2026, 11:34 pm IST

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் எம்எல்ஏ கோ.அரி பக்தா்களுக்கு வேட்டி, புடவைகளை வழங்கினாா்.

இதன் ஒரு பகுதியாக மூலவா், ஆபத்சகாய விநாயகா், சண்முகா், வள்ளி, தெய்வானை, துா்க்கையம்மன் மற்றும் உற்சவா் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து காவடி மண்டபத்தில் எம்எல்ஏ கோ. அரி, இணை ஆணையா் ரமணி, அறங்காவலா் சுரேஷ்பாபு ஆகியோா் சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தனா்.

முன்னதாக, முருகப்பெருமான், படத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனா். இதில் 2,000 பக்தா்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மேலும், எம்.எல்.ஏ., அரி, இணை ஆணையா் ரமணி பக்தா்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கினா்.

இதே போல், முருகன் கோவிலின் உபகோவில்களான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா், திருப்பாச்சூா் வாசீஸ்வரா், கரிம்பேடு நாதாதீஸ்வரா் மற்றும் பெரியநாகபூண்டி நாகேஸ்வரா் ஆகிய கோயில்களிலும், சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.