ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருவள்ளூரில் சுதந்திர நாள் விழா: நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்!

திருவள்ளூரில் நடைபெற்ற சுதந்திர நாள் விழா கொண்டாட்டம் பற்றி...

On the occasion of Independence Day, the District Collector hoisted the national flag and accepted the police parade salute at the Thiruvallur District Sports Stadium.

சுதந்திர தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடியேற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்ற ஆட்சியர் ச.கவிதா. - படம் - தினமணி

Published On :15 ஆகஸ்ட் 2026, 12:05 pm IST

திருவள்ளூரில் நடைபெற்ற சுதந்திர நாள் விழா கொண்டாட்டத்தில் அந்த மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர நாள் விழாவையொட்டி ஆட்சியர் ச. கவிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுபபு மரியாதையையும் ஏற்றதோடு, பயனாளிகள் 16 பேருக்கு ரூ. 4.77 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நாடு முழுவதும் சுதந்திர நாள் விழாவையொட்டி, சனிக்கிழமை (ஆக. 15) தேசிய கொடியேற்றி வைத்து கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ஆட்சியர் ச.கவிதா தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்ததோடு, காவல் துறையினர் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். வானில் மூவர்ண பலூன்களையும், சமாதானப் புறாக்களையும் பறக்க விட்டார். அதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 600 பேருக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர். அதையடுத்து பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகள் 16 பேருக்கு ரூ. 4 லட்சத்து 77 ஆயிரத்து 956 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். பின்னர் இதையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்து பாலா, பொன்னேரி துணை ஆட்சியர் அப்துல் ராசிக், பயிற்சி ஆட்சியர் பவித்ரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலியன், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார், திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Story image

Summary

The District Collector hoisted the flag and paid respects at the Independence Day celebrations held in Tiruvallur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.