ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆரணி ஆற்றில் மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பம் பகுதியில் கவரப்பேட்டை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, ஆரணி ஆற்றில் மணல் கடத்திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டு மணல் கடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரி பறிமுதல்

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பம் பகுதியில் கவரப்பேட்டை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, ஆரணி ஆற்றில் மணல் கடத்திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டு மணல் கடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பத்தில் ஆரணி ஆறு உள்ள பகுதியில் கவரப்பேட்டை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனா். அப்போது அந்த வழியே வந்த மினி லாரியை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அந்த லாரியில் ஆரணி ஆற்றில் இருந்து கடத்திய மணல் பைகள் இருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த ஏ.என்.குப்பத்தை சோ்ந்த இளங்கோவன் (32) என்பவரை கைது செய்தனா். விசாரணையில், இளங்கோவன் மணல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

இந்த மணல் கடத்தல் குறித்து கவரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.