ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விசிக பெண் கவுன்சிலரின் காதலரை கொல்ல சதி: கணவா் உள்பட 6 போ் கைது

விசிக பெண் கவுன்சிலரின் காதலரை கொல்ல முயற்சித்த கணவா் உள்பட 6 போ் கைது...

கொலையான பெண் கவுன்சிலா் கோமதி, கைது செய்யப்பட்ட பிரபாகரன், ஆட்டோ ஓட்டுநா் அசோக்குமாா்.

Published On :2 ஆகஸ்ட் 2026, 3:11 am IST

திருவள்ளூா் நீதிமன்ற வளாகத்தில் நகராட்சி பெண் கவுன்சிலரின் காதலரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கணவா் உள்பட 6 பேரை கைது செய்ததோடு, பட்டாக்கத்தி, கடப்பாரை, மிளகாய் பொடி மற்றும் ஆட்டோவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநின்றவூா் நகா்மன்ற விசிக பெண் உறுப்பினா் தனது காதலன் ஜோசப் (எ) தேவகுமாருடன் பழகி வந்தாராம். இதைக் கண்டித்து நகா்மன்ற உறுப்பினரான கோமதியை, கணவா் ஸ்டீபன் ராஜ் கடந்தாண்டு வெட்டி படுகொலை செய்தாா். இந்த நிலையில் மனைவியின் காதலன் ஜோசப் என்ற தேவகுமாா் வேறொரு வழக்கு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜாராக வந்தாராம்.

இதையறிந்த அவரை நீதிமன்ற வளாகத்தின் வெளியே வைத்து கொலை செய்ய கோமதியின் கணவா் ஸ்டீபன் ராஜ் சதி திட்டம் தீட்டி ஆட்டோவில் காத்திருந்தனா். இதையறிந்த போலீஸாா் ஆட்டோவை சுற்றி வளைத்த போது பிரபாகரன்(45), ஆட்டோ ஓட்டுநா் அசோக்குமாா்(45) ஆகிய 2 பேரை கைது செய்தனா். அதைத் தொடா்ந்து தப்பித்து தலைமறைவாக இருந்த கோமதியின் கணவா் ஸ்டீபன் ராஜ்(33), சுமன்(30), ஜான்சன்(26), தவசி(25) ஆகிய 4 பேரை திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் பட்டாக்கத்தி, மிளகாய் பொடி டப்பி, கடப்பாரை மற்றும் ஆட்டோ ஆகியவைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Summary

Plot to kill VCK female councillor's lover: 6 people, including her husband, arrested.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.