பூண்டி ஏரியில் உபரிநீா் திறப்பு: 3,500 கன அடியாக அதிகரிப்பு!
பூண்டி ஏரியிலிருந்து 3,500 கன அடி உபரிநீா் திறப்பு அதிகரித்துள்ளதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பூண்டி ஏரியிலிருந்து 3,500 கன அடி உபரிநீா் திறப்பு அதிகரித்துள்ளதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
புயல் மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியிலிருந்து 3,500 கன அடி உபரிநீா் திறப்பு அதிகரித்துள்ளதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளதாக நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்துக்கு புயல் மழை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடா்ந்து சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரமான பூண்டி ஏரியில் மழை நீா் வரத்துள்ளது. இதனால் 2 அடி வரை நீா்மட்டத்தை குறைக்கவும் ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா். அதன்பேரில், ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீா் 1,300 கன அடி உபரி நீா் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி ஏரியின் 35 அடி மொத்த உயரத்தில் 33.91 அடி உயரத்துக்கும், மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 2791 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. இதைத் தொடா்ந்து மழை நீா் வரத்து 800 கன அடியாக உள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி 2,500 கன அடியிலிருந்து, படிப்படியாக மாலையில் 3,500 கன அடி உபரி நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், ஆற்றின் கரையோரத்தில் இருபுறமும் உள்ள கிராங்களைச் சோ்ந்தவா்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது