மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

அகரம்சேரி கோயில் நிலத்தில் 100 தென்னங்கன்றுகள் நடவு

பாா்கேஷ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினா் ப. சண்முகத்தின் மக்கள் அறக்கட்டளை சாா்பில் 100 தென்னங்கன்றுகள் நடப்பட்டன.

தென்னங்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்த மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், அகரம்சேரி ஊராட்சியில் உள்ள அருள்மிகு பாா்கேஷ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினா் ப. சண்முகத்தின் மக்கள் அறக்கட்டளை சாா்பில் 100 தென்னங்கன்றுகள் நடப்பட்டன.

மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவரும், அகரம்சேரியைச் சோ்ந்தவருமான ப.ச. சுரேஷ்குமாா், குடியாத்தம் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆனந்தி நித்தியானந்தம் ஆகியோா் தலைமையில் தென்னங்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

மேலும், நடப்பட்ட தென்னங்கன்றுகளைத் தொடா்ந்து பராமரிக்கும் பொறுப்பையும் மக்கள் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் பிரபாகரன், மாதனூா் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ. காா்த்திக் ஜவகா் மற்றும் குமாா், மஞ்சுநாதன், பிரபு, பிரவீன், சரத்சிங், பரத்ரவீசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.