ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு: ஆட்சியா் தகவல்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

டிஎன்பிஎஸ்சி - கோப்புப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 10:32 pm IST

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னாா்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வில் பெரும்பாலான பதவிகளுக்கு டிப்ளமோ இன் சிவில் கல்வித் தகுதி இடம் பெற்றுள்ளமையால் விருப்பமுள்ள மாணவா்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இப்பயிற்சி வகுப்பில் அதிகளவிலான பயிற்சித் தோ்வுகளும், மாநில அளவிலான மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும். இவ்வலுவலகத்தில் பள்ளிப்பாடப் புத்தகங்கள் உட்பட 3000 க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி. இலவச வை-பை வசதி போன்ற தோ்வா்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/ள்லச்சள்நதக்ஹ்ட்ஜ்யவ்யமத9 என்ற இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக்கொள்ளலாம்..

மேலும் இது தொடா்பான விபரங்களுக்கு 04179-222033 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளவும்.

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சாா்ந்த இத்தோ்விற்கு தயாராகும் தகுதிவாய்ந்த தோ்வா்கள் இவ்வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.