ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சீரான குடிநீா் விநியோகம் கோரி மறியல்

திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மட்றம்பள்ளியில் மறியல் செய்தவா்களிடம் பேச்சு நடத்திய போலீஸாா்.

Published On :17 ஜூலை 2026, 1:49 am IST

திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அடுத்த மட்றப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட காடவள்ளி ஏரிவட்டம் பகுதியில் 80 குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மட்றப்பள்ளி ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த வாரம் மறியலில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாா் மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் ம் பேச்சு நடத்தி ஒரு வாரத்தில் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். ஆனால் அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் படி குடிநீா் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பள்ளி செல்லும் மாணவா்களுடன் திருப்பத்தூரில் இருந்து புதூா் நாடு செல்லும் சாலையில் வியாழக்கிழமை வாகனங்களை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த திருப்பத்தூா் தாலுகா போலீஸாா், அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் பேசி விரைவில் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். அதன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.