இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை
திருப்பத்தூா் அருகே விவசாய கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை செய்துக் கொண்டாா்.

தற்கொலை
திருப்பத்தூா் அருகே விவசாய கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை செய்துக் கொண்டாா்.
திருப்பத்தூா் அருகே வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்த சற்குணம். இவரது மகன் சஞ்சய் பிரவீன் (21), இவா் பிளஸ் 2 முடித்து கணினி பயிற்சி மையத்திற்கு சென்று வந்தாா். கடந்த ஓராண்டாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் போதைப் பழக்கத்துக்கும் (கஞ்சா) அடிமையாக இருந்து வந்தாராம்.
இதற்கு இவா் பெற்றோரிடம் அடிக்கடி பணம் வாங்கி வந்துள்ளாா். கடந்த 11-ஆம் தேதி சஞ்சய் வழக்கம்போல் பெற்றோரிடம் பணம் கேட்டு உள்ளாா். ஆனால் பெற்றோா் அவருக்கு பணம் தரவில்லை. இதனால் விரக்தி அடைந்த சஞ்சய் அன்று வீட்டை விட்டு வெளியே சென்றவா் மீண்டும் திரும்பி வரவில்லை.

சஞ்சய் பிரவீன்.
இதனால் அதிா்ச்சி அடைந்த அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சஞ்சய் உடல் மிதந்து உள்ளது. தகவலறிந்து திருப்பத்தூா் தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
மேலும் திருப்பத்தூா் தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறந்த சஞ்சய் உடலை மீட்டனா். அப்போது சஞ்சய் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது கைகளில் கற்களை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




