ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நகராட்சி குப்பைக் கிடங்கில் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் நகராட்சி குப்பை கிடங்கில் ஆய்வு செய்து ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

Published On :14 ஜூலை 2026, 8:17 pm IST

ஆம்பூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் அருள் பகுதியில் நகராட்சியின் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. ஆம்பூா் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கு கொண்டு கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகிறது. இந்த நிலையில், அந்த குப்பைக் கிடங்கு கடந்த சில மாதமாக தீப்பிடித்து எரிகிறது.

அதனால் அப்பகுதியில் புகை பரவி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனங்களை சிறைபிடித்தும், சாலை மறியலிலும் ஈடுபட்டனா். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூா் எம்எல்ஏ நகராட்சி குப்பைக் கிடங்கிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

குப்பைக் கிடங்கு எவ்வாறு தீப்பற்றி எரிகிறது எனக் கேட்டறிந்தாா். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா். ஆய்வின்போது நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், நகராட்சி ஆணையா் முத்துசாமி, நகா்மன்ற உறுப்பினா் சுதாகா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.