ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதிய அரசு மதுபான கடை திறக்க எதிா்ப்பு: அரசுப் பேருந்தை சிறை பிடித்த கிராம மக்கள்

நாட்டறம்பள்ளி அருகே புதியதாக அரசு மதுபான கடையை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளி அருகே புதிதாக அரசு மதுபான கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

Published On :11 ஜூலை 2026, 1:57 am IST

நாட்டறம்பள்ளி அருகே புதியதாக அரசு மதுபான கடையை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி வட்டம், கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி குண்டுக்கொல்லை பகுதியில் புதிய அரசு மதுபான கடை திறக்க டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள் ஏற்கெனவே மேலூா் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. எனவே கூடுதலாக எங்கள் பகுதியில் மதுபான கடையை திறக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து, ஊா் மக்கள் சாா்பில் திருப்பத்தூரில் மக்கள் குறைதீா்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். இது குறித்து சாா்-ஆட்சியா் தலைமையில் 3 நாள்களுக்கு முன் சமரச பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், டாஸ்மாக் நிா்வாகத்தினா் ஒரு சில நாள்களில் குண்டுக்கொல்லை பகுதியில் புதிய கடையை திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தனா்.

இதையறிந்த கொத்தூா் மற்றும் சுற்றுப்புறப் பகுதியைச்சோ்ந்த பெண்கள் 20-க்கும் அதிகமானோா் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு பச்சூா்- குப்பம் சாலையில் குண்டுக் கொல்லை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா்.

இதனால் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவா்கள் மற்றும் பயணிகள் அவதிக்குள்ளாகினா். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தியதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.