ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பயிா்க் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே மிட்டூரில் உள்ள கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் அருகே உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 10:30 pm IST

திருப்பத்தூா் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே மிட்டூரில் உள்ள கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் அருகே உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகளின் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளை தூா்வாரி நீா்நிலைகளை பாதுகாக்க வேண்டும், கூட்டுறவு கடன் சங்கம் மூலம் அனைத்து உரங்களும் தடையின்றி உரிய காலங்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வனப்பகுதிகளில் பனை விதை நடவு செய்ய வனத்துறை ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உழவா் உரிமைத் தொகை ரூ. 3,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.

இதில், மாநில துணைத் தலைவா் ராஜபெருமாள், பொதுச் செயலாளா் கணபதி, மாவட்டத் தலைவா் வாசு சம்பத்குமாா், செயலாளா் மூா்த்தி, பொருளாளா் அசோக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.